கேள்வி: இட ஒதுக்கீட்டால் தகுதி, தரம் பாதிக்கப்படாதா?
பதில்: இந்த தகுதி, தரம், திறமை என்பதே ஒரு ஏமாற்று வாதம் என்று அறிஞர் அண்ணா, அம்பேத்கர் இருவருமே தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கர் ஒரு படி மேலே போய் தகுதி பற்றிய பேச்சு ஒரு fetish என்கிறார்! எப்படி?
ஒரு பேருந்தை ஓட்ட ஆள் வேண்டும் என்றால் அவரிடம் பேருந்து ஓட்டுநருக்கான உரிமம் இருந்தால் போதும். மைக்கேல் சூமாக்கர் தான் உலகத்திலேயே சிறந்த ஓட்டுநர் என்று நாம் அவரை அழைத்து வருவதில்லை. எல்லா வேலைகளுக்குமான தகுதியும் இவ்வாறே.
தகுதி தான் முக்கியம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட,
நாம் கல்வி கற்பதற்கு முன்பே உலகின் மிகச் சிறந்த பாலங்களையும் விமானங்களையும் உருவாக்கிய ஜெர்மன், ஜப்பான் நாட்டு ஆட்களை அழைத்து வந்து நாம் ஏன் வேலை கொடுப்பதில்லை?
அப்போது மட்டும் இந்திய அரசு இந்தியருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது அல்லவா?
ஒரு வேலையைச் செய்ய உலகத்திலேயே சிறந்த ஆளைக் கண்டுபிடிப்பதை விட, அந்த வேலை வாய்ப்புகளைச் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் பிரித்துத் தருவதே நல்லாட்சி.
இதைத் தான் இட ஒதுக்கீடு செய்கிறது.
தொடர்புடைய தகவல்:
மனுவும் சூத்திரர்களும் என்ற நூலில் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்:
The Non-Brahmin Party held the view that good Government was better
than efficient Government was not a principle to be confined only to the
composition of the Legislature & the Executive. But that it must also be made applicable to the field of administration.It was through administration that the State came directly in contact with the masses. No administration could do any good unless it was sympathetic. No administration could be sympathetic if it was manned by the Brahmins alone. How can the Brahmin who holds himself superior to the masses, despises the rest as low caste and Shudras, is opposed to their aspiration, is instinctively led to be partial to his community and being uninterested in the masses is open to corruption be a good
administrator ? He is as much an alien to the Indian masses as any foreigner can be.As against this the Brahmins have been taking their stand on efficiency pure & simple. They know that this is the only card they can play successfully by reason of their advanced position in education. But they forget that if efficiency was the only criterion then in all probability there would be very little chance for them to monopolise State service in the way and to the extent they have done. For if efficiency was made the only criterion there would be nothing wrong in employing Englishmen, Frenchmen, Germans &
Turks instead of the Brahmins of India.Be that as it may, the Non-Brahmin Parties refused to make a fetish to efficiency and insisted that there must be introduced the principle of communal ratio in the public services in order to introduce into the administration an admixture of all castes & creeds and thereby make it a good administration.
பார்க்க – முகநூல் உரையாடல்