கேள்வி: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை இப்படி மாற்றலாமா? அல்லது, அப்படி மாற்றலாமா? என்னிடம் ஒரு புதிய முறை இருக்கிறது!
பதில்:
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.
நம்மை விட இந்த முறையைக் கொண்டு வந்த திராவிடத் தலைவர்களும் அண்ணல் அம்பேத்கர் போன்றோரும் அறிவாளிகள் என்பதை ஏற்றுக் கொள்ள நம் egoவை சற்று ஓரமாக வைக்க வேண்டும்.
ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டையே முறைப்படியும் முழுமையாகவும் அனைத்து மட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதை ஒழுங்காக இரு தலைமுறைகள் செய்தால் கூட ஒரு மாநிலம் எந்த அளவு முன்னேறலாம் என்பதற்குத் தமிழ்நாடு சாட்சி.
அத்தோடு, பொருளாதார அடிப்படை போன்ற புதிய கோல்மால்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இருக்கிற முறையில் நடைபெறுகிற ஊழலை வழக்குகள் போட்டும் போராட்டங்கள் செய்தும் நிறுத்த வேண்டும்.
அப்படி என்றால் மாற்றமே தேவையில்லையா?
கடந்த ஒரு நூற்றாண்டாக தொடர்ந்து இட ஒதுக்கீட்டு முறையை மேம்படுத்தித் தானே வந்திருக்கிறோம்?
ஆம், நியாயமாகச் செய்யக்கூடிய நிறைய சீர்திருத்தங்கள் உள்ளன.
ஆனால், அதையும் 69% சாதி அடிப்படை இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டுத் தான் அளிக்க வேண்டும்.
ஏன் என்றால், நம் சமூகம் மேலிருந்து கீழாகச் சாதிகளால் தான் பிரிக்கப்பட்டிருக்கிறது.
சாதி அடிப்படையில் இடங்களைப் பிரித்துக் கொண்ட பிறகு,
சாதி அடுக்கின் ஒரே மட்டத்தில் உள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டுக்கு,
ஒரே சாதி. ஆனால், ஆணும் பெண்ணும் சந்திக்கும் சிக்கல்கள் மாறுபட்டவை.
இப்போது அரசு வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பது போல் கல்வியிலும் தர வேண்டும்.
பெண்கள் என்னும் மட்டத்தில் கைம்பெண்கள் படும் பாடு அதிகம். எனவே, அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு.
அனைவரும் கைம்பெண்களாகவே இருந்தாலும் மாற்றுத் திறனாளியாக இருந்தால் மேலும் சோதனை.
எனவே, அதற்கு ஒரு ஒதுக்கீடு.
Vertical reservation by caste.
Horizontal reservation by other factors.
Each factor deserves its full position.
அதாவது பெண் என்றால் பெண் தான். பெண்ணுக்குரிய இடத்தைக் கொடுத்து விட வேண்டும்.
கூடை வைத்திருக்கிற பெண்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு இல்லை என்று கழித்துக் கட்டக்கூடாது.
Creamy layer என்ற பெயரில் இப்படிக் கழித்துக் கட்டுவதால் தான் 27% OBC இட ஒதுக்கீட்டை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இந்தப் புரிதலோடு நிறைவேற்றப்படுகிற இட ஒதுக்கீடு தான் முழுப்பயனை அளிக்குமே ஒழிய,
சாதியைப் புறக்கணித்துவிட்டோ அதன் முக்கியத்துவத்தைக் குறைத்தோ (அதாவது சாதியை வைத்துச் சில புள்ளிகள், வேறு சிக்கல்களை முன்னிட்டு இன்னும் சில புள்ளிகள் போல்) நடைமுறைப்படுத்தப்படுகிற இட ஒதுக்கீடு,
மீண்டும் சாதி ஆதிக்கத்தைத் தான் கொண்டு வரும்.
அது எப்படி என்றால்,
உழைக்கும் மக்கள் 125 கோடி பேர் உள்ள நாட்டில்,
இட ஒதுக்கீடு இல்லாத கிரிக்கெட் அணியில்,
எப்படிப் பார்ப்பனர்கள் மட்டும் நிறைய தேர்வாகிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
புரியும்.
பார்க்க… முகநூல் உரையாடல்