• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / சாதியின் காரணமாகத் தான் திராவிட இயக்கம் அயோத்தி தாசரை இருட்டடிப்பு செய்கிறதா?

சாதியின் காரணமாகத் தான் திராவிட இயக்கம் அயோத்தி தாசரை இருட்டடிப்பு செய்கிறதா?

May 15, 2019

கேள்வி: சாதியின் காரணமாகத் தான் திராவிட இயக்கம் அயோத்தி தாசரை இருட்டடிப்பு செய்கிறதா?

பதில்:

அண்ணா அறிவாலய அருங்காட்சியகத்துக்குச் செல்லுங்கள். அங்கு அயோத்திதாசரை திராவிட இயக்க வரலாற்றின் முன்னோடி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அம்பேத்கரைத் தனக்கும் தலைவராகத் திகழக் கூடியவர் என்று பெரியார் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

திராவிட இயக்கத் தோழர்கள் பலரும் பெரியாருக்கு இணையாகவும் மேலாகவும் அம்பேத்கரை மதிக்கிறார்கள்.

இவ்வளவு ஏன், சாதி வெறி பிடித்த யாரும் அண்ணாவையும் கலைஞரையும் தலைவராக ஏற்றுக் கொண்டு இந்த இயக்கத்தில் நீடிக்க மாட்டார்கள்.

ஆக, திராவிட இயக்கத்துக்கு யாரையும் சாதியின் காரணமாகத் தூக்கிப் பிடிக்கும் வழக்கமும் இல்லை. இருட்டடிப்பு செய்யும் குணமும் இல்லை.

நீதிக் கட்சியில் கூட எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லாரையும் விட பெரியார் கொண்டாடப்படுவதற்குக் காரணம்:

பெரியாரின் சிந்தனையும் செயற்பாடும் தமிழர் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தியுள்ளது. அவருக்கு வாய்த்த தம்பிகள் கட்டியமைத்த நிறுவனங்களும் அவர்கள் கைப்பற்றிய கோட்டைகளும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

வரலாறு எல்லாருக்குமே உரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆனால், காமராசரை காலெண்டரில் தொங்க விட்டுள்ள சமூகம் போல்,

சாதி பார்த்துத் தான் நீங்கள் ஒருவரைத் தலைவராகக் கொண்டாடுவீர்கள் என்றால்,

அதையே திராவிட இயக்கத்தவரும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால்,

நியூட்டனின் மூன்றாம் விதி படிக்கவும்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2027