இன்று பொருளாதாரம் சரியில்லை. படித்தவருக்கு வேலை இல்லை. வேலை இருப்பவர்களுக்கு அது நிரந்தரம் இல்லை.
அதனால் படித்து என்ன பயன் என்கிறார்கள்! வேலை பெற தகுதி கொடுக்காத படிப்பு தேவையா என்கிறார்கள்!
நாளையே பொருளாதாரம் நன்றானால், உடனே தேவைக்கு ஏற்ப ஒரே நாளில் பட்டதாரிகளை உற்பத்தி செய்ய முடியுமா?
1920களில் தொடங்கி பள்ளிக் கல்வி, ஆங்கிலக் கல்வி, அதைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி என்று நாம் தயார் நிலையில் இருந்ததால் அல்லவா,
1990களில் பொருளாதாரம் தாராளமயமான போது அந்த வாய்ப்புகளை நம்மால் பற்றிக் கொள்ள முடிந்தது!
அட, உள்நாட்டில் வேலை இல்லா விட்டால் கூட, திறமை இருந்தால் தேவை இருக்கிற ஒரு நாட்டுக்குப் போய் பிழைத்துக் கொள்ள முடியுமே!
படிப்பு இல்லாத நம் முன்னோரின் நிலை என்ன?
அவர்கள் கரும்பு வயல்களுக்கும் ரப்பர் தோட்டங்களுக்கும் இரயில் பாதை போடுவதற்கும் கொத்தடிமைக் கூலிகளாக அல்லவா போனார்கள்!
கல்வி இல்லாவிட்டால் நம் நிலை பஞ்சம் பிழைக்கப் போகும் பரதேசிகள் நிலை தான்!
பார்க்க… முகநூல் உரையாடல்