ஒரு நகரத்தின் மிகச் சிறந்த புரோட்டா மாஸ்டருக்குக் கிடைக்கும் சம்பளம் தான் ரூ.18,000. இந்த நிலைக்கு வர அவர் பத்து ஆண்டுகளாவது பரோட்டா சுட்டிருப்பார்.
கல்லூரியை விட்டு வெளியே வரும் ஒரு பொறியாளருக்கு ரூ. 10,000 என்பது மிக நல்ல சம்பளம். பத்து ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றி நகரத்தின் சிறந்த பொறியாளர் ஆனால் இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம்.
நீ Engineer ஆவது பொறுக்காமல் ITIல் ஒரு Fitterஆகவோ, electricianஆகவோ பயின்று வாழ்நாள் முழுதும் அடிமைச் சேவகம் செய்ய வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம். இதற்கு Skill development என்று மாய்மாலப் பெயர்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.
நீ படித்த படிப்பு வீண் என்பார்கள்.
நம்பாதே.
படி.
முன்னேறு.
கல்வி தான் உன்னை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கும்