கேள்வி: கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களா?
பதில்:
நான் கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கவில்லை.
ஆனால், இன்று கல்வி பரவலாகப் பலருக்கும் கிடைப்பதில் (accessibility; not affordability) தனியாரின் பங்கை ஏற்றுக் கொள்கிறேன்.
பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு விடுதி கூட இல்லையே என்று தொடங்கியது தான் திராவிட இயக்கம்.
இந்தியாவிலேயே அதிகமாக ~50% பேர் தமிழகத்தில் உயர்கல்வி பெறுகிறார்கள் என்பது திராவிடத்தின் மாபெரும் சாதனை.
ஆனால்,
* கல்வி தரமில்லை என்கிறார்கள்
* கல்வி தனியார்மயமாகி விட்டது என்கிறார்கள்
* அரசியல்வாதிகள் கல்விக்கொள்ளையர் ஆகி விட்டனர் என்கிறார்கள்
வழக்கம் போல திராவிட இயக்கத்தின் இந்தச் சாதனையையும் குற்றமாகத் திரிக்கிறார்கள்.
நாம் ஏதோ தவறு செய்து விட்டது போல் நம்மை நம்பிக்கையின்மையில் தள்ளுகிறார்கள்.
ஆனால்,
ஏன் காசு இருந்த காலத்திலும் சாதியின் பெயரால் நம்மைப் படிக்க விடாமல் செய்தார்கள் என்று இவர்கள் பேசி இருக்கிறார்களா?
அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு என்று வீட்டுக்குள்ளேயே அவர்களைப் பூட்டி வைத்த மதங்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்களா?
சாதி, மதத்திற்கு எதிராக இவர்கள் ஒரு புல்லையாவது புடுங்கி இருக்கிறார்களா?
ஆம், அனைவருக்கும் தரமான இலவசமான பொதுக் கல்வி வேண்டும் என்பது தான் திராவிட இயக்கத்தின் நிலைப்பாடு.
அரசு அதற்கான வளங்களைத் திரட்டும் வரை,
நாட்டுக்கு நாலே நாலு IIT கட்டி வைத்துக் கொண்டு,
மற்றவர்களுக்கு எல்லாம் தரம் இல்லை; நீங்கள் எல்லாம் படிக்கத் தேவையில்லை என்று வீட்டுக்கு அனுப்ப முடியாது.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார்கள்.
தனியாரில் கல்விக் கடன் வாங்கிப் படித்த எத்தனையோ பேர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
அப்படியும் சிரமப்படுவோருக்கு கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்கிறது திமுக.
கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வேறு ஏதாவது ஒரு அரசியல் கட்சி உலகில் இருந்தால் குறிப்பிடுங்கள்.
முதலில் கல்வி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.
பிறகு தான் அது இலவசமா தரமா என்று அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும்.
பசித்தவனுக்கு சோறு கிடைக்க வேண்டும்.
சோறு கொடுத்தால் இலவசமாகத் தான் தருவேன் என்று பாதி மக்களைச் சாகடிக்க முடியாது.
பார்க்க… முகநூல் உரையாடல்