காந்தி போராடி விடுதலை வாங்கினார் என்பது ஒரு கதை.
இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் பொருளாதாரம் வலுவிழந்து நாட்டை ஆள முடியாமல் விட்டு விட்டு ஓடினார்கள் என்பது இன்னொரு கதை.
ஆங்கிலேயன் தானாகச் சுதந்திரம் கொடுப்பான் என்று சும்மா உட்கார்ந்திருந்தால்,
இந்தியா என்ற ஒரு நாட்டையும் அதற்குத் தேவையான நாட்டுப் பற்றையும் கட்டமைத்திருக்க முடியாது.
அது போல் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கான தீர்வுகள் என்று கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்ற சொல்ல முடியாது.
ஆனால், போராட்டம் என்ற செயற்பாடு தான் நாம் ஓரினம் என்ற உணர்வை வலுப்படுத்துகிறது.
நாம் இனத்தால் திராவிடர், மொழியால் தமிழர், வாழ்விடத்தால் தமிழ்நாட்டவர் என்ற இந்த உணர்வு ஒரு மெய்நிகர் தேசம்.
இந்த மெய் நிகர் தேசத்துக்கும் இன்றைய இந்தியாவுக்குமான முரண்கள் தான் நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்