சம்பளத்தைத் தான் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்த முடியும்.
சம்பளத்தைத் தான் அடுத்தவர்களுக்கு உயர்த்தினாயே எங்களுக்கு ஏன் உயர்த்தவில்லை என்று கேட்க முடியும்.
அரசிடம் நிதி இருந்தால் போதும். அல்லது, கடன் வாங்கியாவது சம்பளம் தரலாம்.
ஆனால், இட ஒதுக்கீடு என்பது பங்கு.
இங்கு இருப்பதே மொத்தம் 100% தான்.
கலைஞர் கிராமப்புற மாணவர்களுக்குப் 15% இட ஒதுக்கீடு தந்தார்.
ஜெயலலிதா அதனை 25% என்று உயர்த்தினார்.
நீதிமன்றம் சென்றார்கள்.
இந்த இட ஒதுக்கீடே செல்லாது என்று ஒட்டு மொத்தமாகத் தூக்கி விட்டார்கள்.
அது போல், 69%க்கு மேல் இட ஒதுக்கீட்டை உயர்த்த எடுக்கும் எந்த முயற்சியும்,
ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டுக்கே உலை வைப்பதாக முடியலாம்.
எனவே, 69%க்கு மேல் உயர்த்த வேண்டும் எந்த ஒரு கோரிக்கையையும் மிக மிகக் கவனமாகவே அணுக முடியும்.
அப்படி 69% முடியாத நிலையில்,
நம் முன் இரண்டு தெரிவுகள் தான் உள்ளன.
1. உள் ஒதுக்கீடு.
2. ஒரு பிரிவுக்கு உள்ள இட ஒதுக்கீட்டைக் குறைத்து அதனை இன்னொரு பிரிவுக்கு வழங்குவது.
அரசாங்கத்திடம் காசே இல்லாவிட்டால் கூட, ஒரு பிரிவு ஊழியர்களுக்குச் சம்பளம் ஏற்ற வேண்டும் என்று இன்னொரு பிரிவு ஊழியரின் சம்பளத்தைக் குறைக்க மாட்டார்கள்.
சம்பளத்திற்கே இப்படித் தான் என்னும் போது,
ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டை யாரும் குறைக்க முற்பட மாட்டார்கள்.
ஆக, 69% இட ஒதுக்கீட்டில் எல்லா சாதிகளுக்கும் சீராக எப்படிப் பங்கு வைக்கலாம் என்பது தான் நம் முன் உள்ள பாதுகாப்பான வாய்ப்பு.
அதனால் தான் MBC, BC இசுலாமியர்கள், SCA, மகளிர், தமிழ் வழிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் என்று தொடர்ந்து உள் ஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
பார்க்க – முகநூல் உரையாடல்