அரசு தண்ணீர் கொடுக்கிறது.
எங்களுக்குத் தண்ணீர் வேண்டாம், பால் கொடு என்று கேட்கிறோம்.
அரசு பால் கொடுப்பதற்குப் பதில்,
ஏற்கனவே உள்ள தண்ணீரில் ஒவ்வொரு சொட்டு சொட்டாகப் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது.
அதே சட்டியில் வண்டி வண்டியாகத் தண்ணீரையும் ஊற்றிக் கொண்டிருக்கிறது.
அது என்றைக்குப் பாலாக மாறுவது?
27% OBC இட ஒதுக்கீடு வந்து 30 ஆண்டுகள் ஆகியும் இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் 12% மட்டுமே OBCக்கள் உள்ளனர்.
ஏன் இந்த நிலை?
புதிதாக உருவாகிற வேலை வாய்ப்புகளில் மட்டும் தான் OBC இட ஒதுக்கீடு கொடுப்பார்கள்.
ஏற்கனவே பணியில் இருக்கிறவர்கள் வேலையை விட்டுப் போய் காலி ஆகிற இடங்களில் மட்டும் தான் OBC இட ஒதுக்கீடு கொடுப்பார்கள்.
அதுவும் Roster முறையைக் குழப்பி விட்டு பெரும்பான்மை உயர் பொறுப்புகளைப் பொதுப் போட்டிக்குப் போவது போல் பார்த்துக் கொள்வார்கள்.
OBC பிரிவுக்கு வேலை காலி என்றால் விளம்பரம் கூட கொடுக்க மாட்டார்கள்.
படித்துத் தகுதியாய் வருகிற ஆட்களை எல்லாம் creamy layer என்று அனுப்பி விடுவார்கள்.
போதாக்குறைக்கு,
உயர் சாதியினருக்கு 10% பிராடு ஒதுக்கீடு வேறு கொண்டு வருகிறார்கள்.
மற்றொரு புறம்,
இருக்கிற அரசு நிறுவனங்களை எல்லாம் காயலான் கடையில் விற்று விடுவார்கள்.
பிறகு எங்கிருந்து உயரும் OBC பங்கேற்பு?
பார்க்க – முகநூல் உரையாடல்