கேள்வி: என்ன இருந்தாலும் இந்த ஏழை அர்ச்சகர்கள் பாவம் இல்லையா?
பதில்:
பாவம் தான். ஆனால், அவர்கள் ஏழைகளாக தொடர ஒரே காரணம் பணக்கார அர்ச்சகர்கள் தான்.
எப்படி என்கிறீர்களா?
ஏழை மீனவராகப் பிறந்த அப்துல் கலாம் படிப்பால் உயர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஆக முடிகிறது.
ஒருவர் ஏழை விவசாயி மகனாகப் பிறந்தாலும் ISRO தலைவர் கூட ஆக முடிகிறது.
ஆனால், ஒரு ஏழை அர்ச்சகர் வேதம் படித்து பக்தி, திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு கொண்டிருந்தாலும் ஏன் குறைந்தபட்சம் ஒரு பணக்கார அர்ச்சகர் கூட ஆக முடியவில்லை?
இத்தனைக்கும், ஆகமக் கோயில்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தானே 100% இட ஒதுக்கீடு உள்ளது?
ஏன் என்றால், இங்கு ஆகமம், மரபு என்ற பெயரில் ஒவ்வொரு கோயிலையும் சில அர்ச்சகர் குடும்பங்கள் குடும்பச் சொத்தாக வைத்திருக்கின்றன. அதே சாதியில் பிறந்தாலும் கூட வேறு யாரும் அர்ச்சகர் பணிக்குச் சேர முடியாது.
இந்து அறநிலையத்துறை மூலம் கோயிலில் உள்ள மற்ற எல்லா பணிகளுக்கும் அரசு நேர்மையாக தேர்வு நடத்தி ஆட்களை நியமிக்கிறதே!
இது போல், கோயில் அர்ச்சகர் ஆவதற்கும் ஒரு நுழைவுத் தேர்வு, Recruitment board இருக்கிறதா?
இப்படி ஒரு தேர்வு ஆணையத்தை அமைக்க விடாமல் தடுப்பது யார்?
அரசு அர்ச்சகரை நியமிக்க முயன்றால் வழக்கு தொடுப்பது யார்?
அதற்கு ஆதரவாக தீர்ப்பு தருவது யார்?
கேளுங்கள். நன்றாகக் கேளுங்கள்.
ஏழை அர்ச்சகர்கள் ஏழைகளாகவே தொடர ஒரே காரணம் பணக்கார அர்ச்சகர்கள் தான்.
பார்க்க… முகநூல் உரையாடல்