பல கணித மேதைகள் எந்த நிறுவலும் இன்றி மொத்தமாக பல தேற்றங்களை எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.
அவற்றை நிறுவுவது தான் பல ஆய்வு மாணவர்களின் வேலையாக இருக்கிறது.
அது போல் திராவிடப் பொருளாதாரம் என்பது பல்கலைக்கழககங்களில் ஆராய்ச்சி செய்து, காரல் மார்க்ஸ் போல் புத்தகம் எழுதி வைத்து நிறுவியது அல்ல.
இது மக்களிடம் தோன்றிய தலைவர்கள் மக்களுக்காக உருவாக்கிய பொருளாதார மாதிரி.
நூறு ஆண்டுக்கு முன்பு நீதிக் கட்சி மாணவர்களுக்கு உணவு தந்து படிக்க வரச் சொன்னது.
50 ஆண்டுகள் கழித்துத் தான் இது ஒரு நல்ல திட்டம் என்று புரிந்து கொண்டு இந்திய அரசும் உலக வங்கியும் ஆதரிக்கிறது.
தாலிக்குத் தங்கமும் காசும் கொடுத்தால் பெண்கள் கல்வி கற்பார்கள் என்று சொன்னால் உலகம் சிரிக்கும். ஆனால், அதை 30 ஆண்டுகள் முன்பே வெற்றிகரமாக கலைஞர் செய்து காட்டி விட்டார்.
மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஏழைகள் உங்களைப் போல் தலைவர்கள் எங்களுக்கு வாய்க்கவில்லையே என்று புலம்புகிறார்கள்.
ஒரு அம்மா உணவகத்தைக் கூட தமிழகம் செய்தால் தான் மற்றவர்கள் காப்பி அடித்துச் செய்ய அறிவு இருக்கிறது.
எங்கள் தலைவர்கள் பொருளாதார மேதைகள். அவர்களின் திட்டங்கள், கொள்கைகள் ஏன் வேலை செய்கின்றன என்று நீங்கள் பொறுமையாக ஆய்வு செய்து proof எழுதிக் கொள்ளுங்கள்.
அதுவரை நாங்க வைச்சது தான்டா சட்டம்! நாங்க போடுறது தான் திட்டம்! முடியலைன்னா மூடிக்கிட்டுப் போங்கடா!