இட ஒதுக்கீட்டின் பயன் அனைத்துச் சாதிகளுக்கும் கிடைக்க வேண்டும்,
அதனைக் குறிப்பிட்ட சாதிகள் மட்டும் அவர் தம் மக்கள் தொகைக்கு மீறி பெற்றுக் கொள்ளக் கூடாது என்று,
தொடர்ந்து உள் ஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தியது,
திராவிட முன்னேற்க கழகமே!
SC/ST என்று இருவருக்கும் பொதுவாக இருந்த ஒதுக்கீட்டை SC-18% தனி, ST-1% தனி என்று புதிதாக உருவாக்கியது.
BC என்று பொதுவாக இருந்த 50% இட ஒதுக்கீட்டை BC – 30%, MBC – 20% தனி என்று புதிதாக உருவாக்கியது.
BC – 30% என்று இருந்ததை இசுலாமியர்களுக்குத் தனியே 3.5%, கிறிஸ்தவர்களுக்குத் தனியாக 3.5% என்று உள் ஒதுக்கீடு செய்தது. கிறிஸ்தவர்கள் BC ஒதுக்கீடே போதும், BCக்குள் தனியாக உள் ஒதுக்கீடு வேண்டாம் என்று திருப்பி அளித்து விட்டார்கள்.
அதே போல் SCயில் SCAக்குத் தனியாக 3% உள் ஒதுக்கீடு தந்தார்.
இது மட்டுமா?
அரசுப் பணிகளில்,
பெண்களுக்கு 30% ஒதுக்கீடு.
தமிழ் வழிய மாணவர்களுக்கு 20% ஒதுக்கீடு.
மேலும்,
கிராமப்புற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுத்தார்.
ஈழத்து மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார்.
இவ்விரண்டையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இவ்வாறு,
தமிழ்நாட்டின் பரவலான, சீரான வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர்.
அவர் தான் தலைவர்.
பார்க்க – முகநூல் உரையாடல்