கேள்வி: உரிமைக் குரல் X வெறி – இது இரண்டுக்குமான வேறுபாடு என்ன?
பதில்:
ஏதேனும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம்.
அந்தச் சாதியின் வேட்பாளர்கள் ஒருவரைக் கூட ஒரு பெரிய கட்சி தேர்தலில் நிறுத்தவில்லை என்று கொள்வோம்.
எங்கள் சாதி ஆளை நிறுத்துகிற கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்பது சாதி வெறி.
எங்கள் சாதியில் இத்தனை இலட்சம் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இத்தகைய துயரங்களைப் படுகின்றனர். அவர்களின் துயர் துடைக்க இத்தகைய சட்டங்களும் திட்டங்களும் தேவை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வத்தாலும், அதிகாரத்தில் உரிய பங்கு பெற இட ஒதுக்கீட்டுச் சட்டம் தேவை.
இவற்றை நிறைவேற்றித் தரக் கூடிய கட்சிக்கு வாக்களிப்போம் என்று தனிநபர்களின் அரசியல் வெற்றியை அல்லாமல் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேசுவது உரிமைக் குரல்.
சாதிக்குப் பதில் மதம், மொழி, பாலினம் எதை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள்.
ஒருவரின் வெறி பிடித்த அரசியலை உரிமைக் குரல் என்று எண்ணி மயங்காதீர்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்