பொறியியல் கல்லூரி மாணவர்கள் இனி GATE தேர்வில் வெற்றி பெற்றால் தான் பட்டம் கொடுப்பார்களாம். இதன் மூலம் நாட்டில் பலர் படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பதைத் தடுக்கப் போகிறார்களாம்!
இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதற்குப் பதில் நீங்க எல்லாம் படிக்கத் தகுதியில்லாத சூத்திர முண்டங்கள் என்று நேரடியாகவே திட்டலாம்.
நான் B.Techல் 7.9 CGPA பெற்றேன். உலகளாவிய GRE, TOEFL தேர்வுகளில் வெற்றி பெற்று சிங்கப்பூர், ஜெர்மனி, நெதர்லாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றிருக்கிறேன்.
ஆனால், நான் GATE தேர்வில் தோல்வி அடைந்தேன்.
GATE தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகள் எல்லாமே 100 இடங்களுக்கு இலட்சம் பேர் போட்டியிடும் சூழ்நிலையில், மற்றவர்களை வடிகட்டுவதற்காக என்றே தேவையில்லாமல் மிகக் கடுமையாக நடத்தப்படும் தேர்வுகள்.
இதில் தேர்வாகாவிட்டால் ஒருவன் படித்த படிப்பு வீண், அவன் முட்டாள் என்று பொருள் இல்லை. இந்தத் தேர்வே தேவைப்படாத எத்தனையோ கல்லூரிகள், வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவற்றுக்குப் பட்டம் தேவை.
எப்படி NEET கொண்டு வந்து +2 படிப்பு வீண் என்று அறிவித்தார்களோ, அதே போல் மாநிலங்கள் எத்தனைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கட்டினாலும் அவை எல்லாம் வீண், உச்சிக் குடுமி எங்கள் கையில் தான் என்று சொல்கிறார்கள்.
இனி இதே போல் மருத்துவம், சட்டம் என்று அனைத்துப் படிப்புகளிலும் Exit exam கொண்டு வருவார்கள். எவனையும் படிக்க விட மாட்டார்கள்.
உனக்குப் படிக்கவே தகுதியில்லை என்பது Version 1.0 சாதி.
இப்போது நீ படிச்சது படிப்பே இல்லை என்று அறிவிக்கிறார்கள். இது Version 2.0 சாதி.
இது மாநில சுயாட்சிக்கும் நன் இனத்தின் தன்மானத்திற்கும் விடுக்கப்படும் சவால்!