இந்தியை எதிர்த்ததால் தமிழகம் பெற்றது என்ன, எதிர்க்காததால் கேரளா இழந்தது என்ன என்று கேட்கிறார்கள்.
அதாவது மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எல்லாம் இந்தியை எதிர்க்காமலேயே தங்கள் மொழியைத் தக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் இந்தியை எதிர்த்தோம் என்று ஓவராக கூவுகிறீர்கள் என்கிறார்கள்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழகத்தில் மட்டும் இந்தியை எதிர்த்துப் போராடியதில்லை.
அன்று இந்தியை எதிர்க்காவிட்டால் இந்திய அரசின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருந்திருக்கும்.
//The Indian constitution, in 1950, declared Hindi in Devanagari script to be the official language of the union. Unless Parliament decided otherwise, the use of English for official purposes was to cease 15 years after the constitution came into effect, i.e., on 26 January 1965. //
இந்திய அரசியல் சாசனம் ஏற்பு பெற்ற 1950ல் இருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டும் தான் ஆங்கிலம் உடன் இருக்கும். அதற்குப் பிறகு இந்தி தான் இந்திய ஒன்றிய அரசின் ஒற்றை ஆட்சி மொழி என்று எழுதி வைத்திருந்தார்கள்.
அதனால் தான் 1965ஐ ஒட்டி இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் வெடித்தது.
எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்ட நேரு அந்த முடிவைக் கைவிட்டு ஆங்கிலத்தையும் சேர்த்துக் கொண்டார்.
அப்படியும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியை மூன்றாவது மொழியாக கொண்டு வந்தார்கள்.
அதுவும் வேண்டாம் என்று தமிழர்கள் போராடினார்கள் என்பதால் தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படது.
தமிழர்கள் இந்திக்கு எதிராகப் போராடியதால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆங்கிலத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். கூடவே, தென்னக மாநிலங்கள் தங்கள் மொழியையையும் தக்க வைத்துக் கொண்டன. வட இந்திய மாநிலங்களில் இந்தி உள்ளூர் மொழியை அடித்து உலையில் போட்டு விட்டது.
தமிழர்கள் போராடாவிட்டால் இந்தியா முழுதுமே இன்று ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா தான்!
தமிழர்கள் இதற்காகத் தாராளமாகப் பெருமைப்பபட்டுக் கொள்ளலாம்
(ஆதாரம் )