இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் சீனா, ரஷ்யா என்று வெளிநாடுகளை நாடுகிறார்கள்.
ஆனால், அங்கு படிப்பு முடித்து திரும்பி வருகிறவர்கள் இந்தியாவில் மருத்துவராக வேலை பார்க்க ஆக FMGE தேர்வு எழுத வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் இப்படித் தேர்வு எழுதி மருத்துவர் உரிமம் பெற்றவர்கள் 16% மட்டும் தான்.
மற்றவர்களின் கல்வித் தகுதி +2வாகவே இருக்கும்.
இந்த 16% பேரும் அதற்குப் பிறகு ஓராண்டு Internship முடிக்க வேண்டும்.
ஆக, இந்தியாவில் ஐந்தரை ஆண்டுகளில் முடிக்க வேண்டிய MBBS, நீங்கள் வெளிநாடு போய் கற்றால் எட்டு ஆண்டுகள் வரை கூட ஆகலாம்.
பல இலட்சம் செலவு செய்து, தெரியாத ஊரில், புரியாத மொழியில் மருத்துவம் படித்த பிறகும் 16% பேர் தான் இந்தியாவில் மருத்துவம் பார்க்க வர முடியும் என்றால்,
இது மிகப் பெரிய சூதாட்டமாகத் தெரிகிறது.
வெளிநாட்டில் இலகுவில் MBBS seat கிடைக்கிறதே என்று தரகர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்!
தொடர்புடைய திராவிட ஆய்வுக் குழு உரையாடல், செய்திக்கு மறுமொழி பார்க்கவும்.
பார்க்க… முகநூல் உரையாடல்