இந்தியாவிலேயே அதிகம் குடிப்பவர்கள் , ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மக்கள். வருடத்திற்கு 35 லிட்டர் அளவுக்கு குடிக்கிறார்கள். இதில் 85% கள் மற்றும் நாட்டு சாராயம்.
நாட்டிலே அதிகமாக சாராயம் புழங்கும் இடம் குஜராத் (95%) . குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர , ஜாரகண்டட், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள குடிகாரர்கள் , கள் & சாராயத்தை 80%+ அதிகமாக குடிக்கிறார்கள்.
மறுமுனையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் கள் & சராயத்தை குடிக்கும் மக்கள் 20% க்கும் கீழ். அதாவது, 80% குடிகாரர்கள் பீர், ஒயின், விஸ்கி போன்ற மதுவகைகளை குடிக்கிறார்கள்.
கள்ளச் சாராயத்தை தமிழகம் கிட்டத்தட்ட ஒழித்துவிட்டது என்றே கூறலாம். ஒரு வேளை பூரண மதுவிலக்கு வந்தால், கள்ளச் சராயம் பெருகும், உயிரிழப்புகள் ஏற்படும்.
2014 சர்வே படி, பெரிய மாநிலங்களில் குடிகாரர்கள் ஒரு வருடத்திற்கு குடிக்கும் மதுவின் அளவு லிட்டரில்.
ஒருங்கிணைந்த ஆந்திரா – 35 லி
பிஹார் – 14 லி
கேரளா – 10 லி
பஞ்சாப் – 10 லி
ஒடிசா – 8 லி
மத்திய பிரதேசம் – 7.5 லி
ஹரியானா – 6.8 லி
ராஜஸ்தான் – 6.3 லி
தமிழ்நாடு – 5.6 லி
குஜராத் – 2.9 லி
உத்திர பிரதேசம் – 2 லி
எனவே, தமிழ்நாட்டு மக்கள் மொடாக் குடிகாரர்கள் போலவும், திராவிட அரசுகள் மக்களை குடிகாரர்களாக ஆக்கி விட்டதை போல, சங்கிகள், சினிமா காரர்கள், தமிழ் தேசிய தும்பிக்ள் ஒரு மாய தோற்றத்தை போலியாக உருவாக்க பார்க்கிறார்கள். அது, உண்மையல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்காய்.
எழுதியவர்: Don Vetrio Selvini
(ஆதாரம்)