• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / இது வரை இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிலும் பொதுப் போட்டியை விட மற்ற பிரிவுகள் குறைந்த மதிப்பெண் தானே எடுக்கிறார்கள்.

இது வரை இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிலும் பொதுப் போட்டியை விட மற்ற பிரிவுகள் குறைந்த மதிப்பெண் தானே எடுக்கிறார்கள்.

July 24, 2019

கேள்வி: இது வரை இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிலும் பொதுப் போட்டியை விட மற்ற பிரிவுகள் குறைந்த மதிப்பெண் தானே எடுக்கிறார்கள். இப்போது 10% ஆட்கள் மதிப்பெண் குறைவுக்கு மட்டும் ஏன் குதிக்கிறீர்கள்?

பதில்:

ஆம், இது வரை இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிலும் பொதுப்பிரிவை விட மற்ற பிரிவுகள் குறைந்த மதிப்பெண் தான் எடுக்கிறார்கள்.

எப்படி?

GEN, BC, BCM, MBC, SC, SCA, ST என்று ஒன்றின் கீழ் ஒன்றாக மதிப்பெண்கள் குறைந்து கொண்டே போகும்.

ஏன் என்றால் சாதிப் படி முறையும் இதே வரிசையில் தான் இருக்கிறது.

SC/ST ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் போன்றவை நாடு முழுவதும் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் சமூக அறிவியல் அடிப்படைத் தரவுளைக் கொண்டு இந்த 69% இடம் முடிவு செய்யப்படுகிறது.

எவ்வளவு தான் நாடு முன்னேறினாலும் சாதியின் பெயரால் இந்தச் சமூகம் எப்படி தடைகளை எதிர்கொள்கிறது என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால், 69% இட ஒதுக்கீடு நியாயம்.

இப்போது SC/STஐ விட ஒருவர் குறைவன மதிப்பெண் வாங்குகிறார் என்றால்,

அவர் ஒன்று சாதியால் அவர்களுக்குக் கீழே ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது, பழங்குடிகளை விட தொலைவான தீவில், எந்த ஒரு வசதியும் இல்லாமல் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டிருக்கும் வேற்றுக் கிரக ஆளாகவாவது இருக்க வேண்டும்.

இல்லை, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்றுத் தொலைக்கிறோம் என்றால்,

இந்த SC, ST, BC, MBCஇல் இல்லாத அளவுக்கு வரலாறே காணாத ஏழையாகவாவது இருக்க வேண்டும்.

இந்த 10% இடங்களைப் பெறும் ஐயர், ஐயங்கார் போன்ற சாதிகளுக்கு மேற்கண்ட வரையறை ஏதாவது பொருந்துமா?

ஆனாலும், அவர்களுக்குப் 10% இடம் ஒதுக்கப்படுகிறது என்றால் தகுதியே இல்லாத ஆட்கள் இடங்களைத் திருடுகிறார்கள் என்று தான் பொருள்.

அதனால் தான் எதிர்க்கிறோம்

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2281