உங்களுக்குத் தெரியுமா?
1960களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் வானொலி அறை கட்டி கிராம மக்கள் கேட்பதற்காக ஒரு வானொலியும் இரண்டு ஒலி பெருக்கிகளும் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தியும் விவசாய அறிவுரையும் ஒலிபரப்பப்படும்.
ஒரு வானொலி வாங்கக் கூட காசு இல்லாமல் இருந்த சமூகம். பணக்காரர்களிடம் மட்டுமே வானொலி இருக்கும்.
எல்லாரும் வானொலி வாங்க முடிந்த காலத்தில், பணக்காரர்களிடம் தொலைக்காட்சி இருந்தது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பஞ்சாயத்து டிவி கொடுத்தோம்.
மக்கள் அன்று வேட்டி, சேலை, உணவு கூட இல்லாமல் இருந்ததால் அவை அனைத்தையம் கொடுத்து அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த பிறகு வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி கொடுத்தோம்.
எல்லாரும் டிவி வாங்க முடிகிற காலத்தில் பணக்காரர்களிடம் மடிக்கணினி இருக்கிறது. இப்போது எங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கிறோம்.
பணக்காரர்கள் எல்லாரும் பைக் வாங்கிய காலத்தில் சைக்கிளும், கார் வாங்கிய காலத்தில் எங்கள் பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுக்கிறோம்.
வருங்காலத்தில் Fridge, Washing machine எல்லாம் கொடுப்போம்.
பணக்காரருக்கும் ஏழைக்கும் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பிக் கொண்டே இருப்பது தான் திராவிடப் பொருளாதாரம்.
உலகப் பொருளாதாரத்தில் இதற்குப் பெயர் Economic mobility.
ஒரு பணக்காரக் குழந்தைக்குப் பிறக்கும் போதே கணினி இருந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு +1 படிக்கும் போதாவது கிடைக்க வேண்டும். ஏழைக்கு என்ன தேவை, ஆடம்பரம் என்பதைப் பணக்காரன் சொல்லக்கூடாது.
ஏழைகளுக்கு வேலை தா உதவிகள் வேண்டாம் என்கிறார்கள்.
நாங்கள் வேலையும் தருகிறோம் பைக்கும் தருகிறோம். பைக்கில் ஏறி வேலைக்குப் போங்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இது திராவிடத்தின் சமூக நீதி.
பிறப்பு மட்டுமல்ல, வாழ்க்கையும் அப்படி ஒப்பாக இருக்க வேண்டும். இது தான் திராவிடத்தின் பொருளாதார நீதி.
இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அடுத்த பிறவியில் தமிழ்நாட்டில் பிறந்து கொள்ளுங்கள்!