உங்களுக்குத் தெரியுமா?
1921. இந்தியாவிலேயே முதன்முறையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றியது. இதைச் செய்தது மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி. திராவிட இயக்கத்தின் முன்னோடி.
1951. இட ஒதுக்கீட்டுக் கொள்கை செல்லும் என்பதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த சம்பகம் என்ற பார்ப்பனர் ஒருவர் இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றார். பெரியார் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். இதன் விளைவாக இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அம்பேத்கர் எழுதிய சட்டத்தை நிலைநாட்டவே இங்கு திராவிடம் தான் போராட வேண்டியிருந்தது.
1990. மண்டல் குழு அறிக்கையை ஏற்று இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது. இதைச் செய்தது கலைஞர் இடம்பெற்ற வி.பி. சிங் ஆட்சி.
2021. நவீன இந்தியாவின் இட ஒதுக்கீட்டு வரலாற்றின் நூற்றாண்டு.
இட ஒதுக்கீடு என்னும் கொள்கையில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பது தமிழகம்.
இது தமிழன் இந்தியாவுக்காக போராடிப் பெற்ற உரிமை.
இந்த உலகமே சேர்ந்து குழப்பினாலும் கடைசித் தமிழன் வரை இட ஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து தெளிவாக இருப்பது முக்கியம்.
தொடர்புடைய குறிப்புகள்:
- சென்னை மாநிலம் எதிர் சம்பகம் துரைராஜன்
- First Amendment of the Constitution of India
- Periyar organised meetings and conferences against the judgment
பார்க்க – முகநூல் உரையாடல்