கேள்வி: ஆரிய எதிர்ப்பு பேசுவது இன வெறி ஆகாதா? நாம் தமிழர் பேசுவதை மட்டும் இன வெறி என்கிறீர்களே!
பதில்:
தெலுங்கு பேசும் ஆதிக்கச் சாதிக்காரர் ஒருவரைப் போல்
தெலுங்கு பேசும் அருந்ததியர் ஒருவர்
பேசும் மொழியின் காரணமாக உயர்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள முடியுமா?
இங்கு ஆதிக்கம் என்பது சாதி, பொருளாதார வலுவால் வருவது. மொழியால் வருவது அல்ல. மொழியின் பெயரால் ஆதிக்கம் அமையவில்லை என்னும் போது, தமிழர் எதிர் பிற மொழியினர் என்று பகைமை பாராட்டுவது மொழியை அடிப்படையாகக் கொண்ட இன வெறி ஆகும்.
ஆனால்,
எந்த மொழி பேசும் பார்ப்பனர்கள், பனியாக்கள் ஆனாலும், அவர்கள் பொருளாதாரம், மற்ற காரணிகளில் எந்த நிலையில் இருந்தாலும்,
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கிறார்கள் அல்லவா?
சாதியின் அடிப்படையிலான அந்த ஆதிக்கத்தை எதிர்த்து நமது உரிமையைக் கோருவதே திராவிட அரசியல்.
பார்க்க… முகநூல் உரையாடல்