• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / அழகுலட்சுமிக்கும் நீட் ஆதரவாளருக்கும் இடையேயான உரையாடல்:

அழகுலட்சுமிக்கும் நீட் ஆதரவாளருக்கும் இடையேயான உரையாடல்:

August 19, 2019

அழகுலட்சுமிக்கும் நீட் ஆதரவாளருக்கும் இடையேயான உரையாடல்:

நான் மூன்று முறை நீட் பாஸ் செய்தும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

– உன் நீட் மதிப்பெண் என்ன?

420.

– உன் +2 மதிப்பெண் என்ன?

1120.

– உன் நீட் மார்க்க பத்தவில்லை. கோச்சிங் போனியாம்மா?

போனேன், சார்.

– மூன்று முறை நீட் எழுதியும் உன்னால் வேண்டிய மதிப்பெண்களைப் பெற முடியவில்லை, அல்லவா?

(ஏளனப் பார்வை)

இதே நீட் ஆதரவாளர் தான் அழகு லட்சுமி அரங்கத்திற்கு வரும் முன்,

அனிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நாங்கள் மருத்துவப் படிப்பில் இடம் வாங்கித் தந்திருப்போம் என்றார்.

அனிதா இறந்த போதும் இதே தான் சொன்னார்கள்.

அவர் மனம் தளராமல் அடுத்த ஆண்டும் நீட் எழுதியிருக்க வேண்டும் என்று.

அவர் மூன்று முறை எழுதியும் கிடைத்திருக்காவிட்டால், அழகு லட்சுமிக்கு நேர்ந்த அதே கதி தான் அனிதாவுக்கும்.

அப்புறம், MBBS மட்டும் தான் படிப்பா, வேறு படிப்பு படிக்கலாமே என்பார்கள்.

அடுத்து NEP வருகிறது.

கல்லூரிப் படிப்பு மட்டும் தான் வாழ்க்கையா?

பெட்டிக் கடை வைத்து பிழைத்துக் கொள் என்று பாண்டேக்கள் கிளம்பி விட்டார்கள்.

பார்க்க: * முகநூல் உரையாடல் * நீயா நானா வீடியோ இணைப்பு

Filed Under: அரசியல், சாதி, நீட்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2455