ஒரு RTO அதிகாரி,
“நீ எல்லாம் வண்டி ஓட்டலாமா” என்று கேட்பதில்லை.
நமக்கு வண்டி ஓட்டத் தெரியுமா என்று சான்றிதழ் கொடுப்பது மட்டும் தான் அவர் வேலை.
அது போல,
யார் மருத்துவம் படிக்கலாம்,
யாருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது,
மாணவர்களை எப்படிச் சேர்ப்பது,
எத்தனை மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவது போன்றவற்றை முடிவு செய்வது எல்லாம்,
இந்திய மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகளின் வேலையாக இருக்கக் கூடாது.
எங்கள் மாநிலத்துக்கு யார் மருத்துவர் ஆகத் தேவையோ அவர்களை நாங்கள் மருத்துவர்களாகப் பயிற்றுவிப்போம்.
அவர்களுக்கு மருத்துவம் ஒழுங்காகப் பார்க்கத் தெரிகிறதா என்று
நீ சான்றிதழ் மட்டும் கொடுத்தால் போதும்.
பார்க்க – முகநூல் உரையாடல்