1951. OBCக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை முன்னிட்டு நல ஆணையம் அமைக்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
1979. ஜனதா கட்சி பிற்பட்டோர் நலனை முன்னெடுப்பதற்காக மண்டல் ஆணையத்தை நிறுவுகிறது.
1980. மண்டல் OBC இட ஒதுக்கீட்டுக்கான தன் பரிந்துரைகளைத் தருகிறார்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதை நிறைவேற்றும் துணிவு ஒரு அரசுக்கும் இல்லை.
1990. வி.பி.சிங் OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி அரசு ஆணை வெளியிடுகிறார்.
அரசு ஆணை வெளியிட்ட ஒரே மாதத்தில் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெறுகிறார்கள்.
இத்தனைக்கும் சமூக, கல்வி அடிப்படைகளில் பின்தங்கி இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாம் என்று இந்திய அரசியல் சாசனம் தெளிவாகக் கூறுகிறது.
ஏற்கனவே பல மாநிலங்களில் OBC இட ஒதுக்கீடும் நடைமுறையில் இருக்கிறது.
அப்படி இருந்தும் இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தடை உத்தரவு பெற முடிகிறது.
மற்ற சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தராதே என்று உயர் சாதியினர் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் தீக்குளிக்கிறார்கள்.
1993. சாதி அடிப்படையிலான OBC இட ஒதுக்கீட்டைச் சிதைக்கும் வண்ணம் Creamy layer என்ற பொருளாதார அளவுகோல் அறிமுகம்.
2008 வரை இந்த 27% இட ஒதுக்கீட்டை வேலையில் மட்டும் தருகிறோம் ஆனால் IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தர முடியாது என்று இழுத்தடித்தார்கள்.
2019. மண்டல் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன.
இருந்தும் மத்திய அரசுப் பணிகளில் 12% விழுக்காடு கூட OBCக்கள் இல்லை. இதுவே பேராசிரியர்கள், Class A அதிகாரிகள் போன்ற உயர்பதவிகளுக்குச் செல்லும் போது 0% தான் இருக்கிறார்கள்.
தகுதியான ஆட்கள் இல்லை என்று இடங்களைக் காலியாக வைத்திருக்கிறார்கள். அதே வேளை தகுதியோடு வரக்கூடியவர்களை Creamy layer என்று விரட்டி விடுகிறார்கள்.
தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்களில் 10% கேட்பவர்கள் OBCக்குத் தேசிய அளவில் கொடுக்கவேண்டிய ஆயிரக்கணக்கான இடங்களை தராமல் சுருட்டிக் கொள்கிறார்கள்.
இந்த OBC மக்கள் தான் இந்தியாவின் 50%க்கு மேல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலோ 70% இருக்கிறார்கள்.
எந்த விதத் தரவுகளும் இன்றி இரண்டே நாட்களில் கொண்டு வரப்பட்ட உயர்சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டை இது வரை நீதிமன்றம் தடை செய்யவில்லை.
அதை உடனே நிறைவேற்றுமாறு அனைத்து மட்டங்களிலும் அழுத்தம் தருகிறார்கள்.
OBC இட ஒதுக்கீடு படும் பாட்டையும்
உயர் சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டுக்கு விரிக்கப்படும் சிகப்புக் கம்பளத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால்,
இந்த நாட்டை உண்மையிலேயே ஆள்வது யார் என்று புரியும்.
இது தான் நான் தேவன், வன்னியன், கவுண்டன், ஆண்ட பரம்பரை, சத்திரியக் குலம் என்று வெட்டிப் பெருமை பேசித் திரியும்
முரட்டு முட்டாள் பீசுகளான சூத்திரர்கள் என்னும் OBCக்களின் கதை.
பார்க்க… முகநூல் உரையாடல்